
இன்று 30.10.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.எழிலரசி, கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் திரு.ஏழுமலை, 06 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு இலக்குப்படை மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அதிகாலை முதல் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு சம்மந்தமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது கிருஷ்ணாபுரம், அருவங்காடு ஆகிய கிராமங்களின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் அளவு பிடிக்கக்கூடிய 05 பேரல்களில் சுமார் 1,000 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் தும்பை காட்டுக்கொட்டாய் அருகே 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை மறைத்து வைத்திருந்த பெரிய பலாப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் குமார்(40) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், மற்றும் கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.