
கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர்

திருவெறும்பூர்: மா27
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது
மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட வழக்கறிஞர்அணி அமைப்பாளர் தினகரன் மற்றும் மாவட்ட தொண்டர்அணி அமைப்பாளர் உதயகுமார்ஆகியோர் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர்அணி மற்றும் மாவட்ட தொண்டர்அணி சார்பில் இணைந்து மார்க்கெட் ஈ பி ரோடு மதுரம் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாபெரும் சிலம்பம்போட்டி நடைபெற்றது
மேலும் இந்த சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இந்த சிலம்பம் போட்டியில் 7வயது முதல் 10 வயது உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 11 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 15 வயது முதல் 17 வயது குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என சுமார்115 பள்ளி மாணவ மாணவிகள் இந்த சிலம்பம்போட்டியில் கலந்து கொண்டனர்

தனித்தனி சுற்றுகலாக நடை பெற்ற இந்த சிலம்பம்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்

மேலும் இந்த சிலம்பம் போட்டியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பன்னீர்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜலிங்கம் மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் ஜெயசித்ரா மற்றும் மாவட்ட தொண்டர் அணி தலைவர் முத்துச்சாமி மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தேவராஜன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
