நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி26-ந்தேதி குடியரசுதினம், மார்ச்29-ந்தேதி உலக தண்ணீர் தினம், மே1-ந்தேதி தொழிலாளர்கள் தினம் , ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி , நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்
ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.

அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் மறுநாளான நவம்பர் 1-ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நவம்பர் 1-ந்தேதி கிராம சபை கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற இருந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாளைக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்று 1-ந்தேதி
நடைபெற இருந்த கிராம சபைகூட்டமானது ஒத்திவைக்கப்படுவதாகவும், கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *