பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்
வைலட்செல்வி தலைமையில் 12.11.24 நடைபெற்றது. மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வசுமதி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆகியோர் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடல் அளவிலான மன அளவிலான பாதிப்புகள் குறித்தும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குற்றங்கள் மற்றும் கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். பள்ளி அளவிலான போதைப் பொருள் தடுப்புக் குழு மூலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமான புகார் தகவல்கள் குறித்த புகார் பெட்டி வழங்கப்பட்டு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது முதுகலை ஆசிரியர் எபினேசர் வரவேற்றார் காவல் உதவி ஆய்வாளர் வனிதா நன்றி கூறினார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *