

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்
பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்..
மடத்துக்குளம்,நவ 27
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய துளிர் அறக்கட்டளை பொதுக்குழு உறுப்பினர் திருமதி உமையாள் அவர்களின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது..
கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கண் சிகிச்சை முகாமிற்கு மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்கள்.
துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கணியூர் காவல்நிலைய காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி இந்த இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.
கண்புரை, கிட்டபார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட
து,
துளிர் அறக்கட்டளை மற்றும் மலரும் நினைவுகள் நண்பர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயனடைந்தனர்..
தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420