கஞ்சா கடத்திய நால்வருக்கு 12 ஆண்டு சிறைவாசம்

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

🐠திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ம் ஆண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (48), சுரேஷ் (41), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜ் (24), அஜித்குமார் (26) ஆகிய நான்கு நபர்களை நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சிபின், இ.கா.ப அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் தமிழ்ச்செல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய பாண்டியன் அவர்களின் சீரிய முயற்சியால் (14.11.2024) மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் நான்கு நபர்களுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *